Niroshini / 2017 ஜனவரி 23 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, புத்தகம் ஒன்றை எழுதும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமல் வீரவன்ச, கடந்த 10ஆம் திகதியன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அன்று மாலை முதலே, அவரது நலம் விசாரிக்கும் நோக்கில் அரசியல்வாதிகள், கலைஞர்கள், நிபுணர்கள் பலர் சென்றிருந்தனர்.
விமல் வீரவன்ச, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாள் முதல் சிறைச்சாலைக்குள்ளேயே அவர் இருந்துள்ளார். அண்மையில் ஒரு நாள் வைத்திய பரிசோதனைக்காக அவரை அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அவரது இரத்த அழுத்தம் அதிகரித்துள்ளமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு, வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
எனினும், விமல் வீரவன்ச அதனை நிராகரித்துள்ள நிலையில், தனது நோய் நிலைமைக்கு சிகிச்சை மாத்திரம் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாகவும், சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய தற்போது மருந்து பெற்றுக்கொண்டு சிறைச்சாலை அறையினுள் காலத்தை கடத்தி வரும் அவர், நீண்ட காலத்துக்குப் பின்னர் தனக்கு கிடைத்த இந்த ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றியுள்ளதாகவும் தற்போது அக்காலப்பகுதியில் புத்தகமொன்றை எழுதும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025