2025 மே 07, புதன்கிழமை

பிரதீபா பிரபா விருது வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸெட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு வியஜரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர் என்.புவனேஸ்வரராஜா ராஜாவுக்கு சிறந்த அதிபருக்கான 'பிரதீபா பிரபா' விருது வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற ஆசிரிய, அதிபர் தேசிய  விருது  வழங்கல் விழாவில் வைத்து இவருக்கான விருதை, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வழங்கினார்.

அதிபர் என்.புவனேஸ்வரராஜா  ஆரம்ப கல்வியை கதிரேசன்  தமிழ் மகாவித்தியாலயம் மற்றும் சுலைமானியா மத்திய கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி மற்றும் கலை முதுமாணிப் பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டமேற்கல்வி டிப்ளோமாவையும் நிறைவு செய்தார்.

இவர் தெரனியாகல  கதிரேசன் தமிழ் மகா வித்தியாலயத்தில்  பிரதி அதிபராகவும்  கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் வித்தியாலயத்தில்  பிரதி அதிபராகவும் அதிபராகவும் மாபொலை அல்-அஷ்ரப் முஸ்லிம் வித்தியாலயத்தில் பிரதி அதிபராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X