Princiya Dixci / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கலீல் எஸ் முஹம்மத்
2016ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர் அனுமதிக்காக கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் விண்ணப்பித்திருந்த மாணவனுக்கு அவர் பின்பற்றும் சமயம் இஸ்லாம் என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாணவனின் தந்தை ஏ.எம்.ஏ இர்சாதுக்கு 12.09.2015 திகதியிடப்பட்ட குறித்த பாடசாலை அதிபரினால் கையொப்பமிட்டு இவ்அனுமதி மறுப்பு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் சுற்று நிருபம் 23/2013 பந்தி 3:2 இன் படி இப்பாடசாலையில் இந்து சமயத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே தரம் 1இல் அனுமதிக்கப்படுவர் என்பதால் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது எனவும் தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமயம் இஸ்லாம் எனவும் அதிபர் ஐ.ராசரத்தினம் கையொப்பமிட்டு அனுப்பியுள்ளார்.
மேற்படி 23/2013 சுற்று நிருபம் 3:2 பந்தியானது பின்வருமாறு குறிப்பிடுகிறது,
1960 இன் 5ஆம் இலக்க மற்றும் 1961 இன் 8ஆம் இலக்க உதவிபெறும் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்ற போது இப்பாடசாலையானது இந்து சமயத்தை சேர்ந்த மாணவருக்கு மட்டுமானது என்கிற காரணத்தை காட்டி இந்நிராகரிப்பு இடம்பெற்றுள்ளது.
எது எவ்வாறு இருந்த போதிலும் இவ்வாறான சுற்று நிருபங்களை காட்டி ஒரு மாணவனின் கல்வி கற்பதற்கான அடிப்படை உரிமை மறுக்கப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இன அடையாளத்தை அல்லது மத அடையாளத்தை வெளிப்படையாகவே சுட்டிக்காட்டி மனித மனங்களிடையே கசப்புணர்வை ஏற்ப்படுத்தும் இவ்வாறன நடவடிக்கைகள் களையப்படல் வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

16 minute ago
24 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
25 minute ago
1 hours ago