2025 மே 01, வியாழக்கிழமை

மத்துகம விபத்தில் பெண் பலி: 11 பேர் படுகாயம்

Editorial   / 2022 நவம்பர் 16 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுகம- மீகஹதென்ன கல்முல்ல பிரதேசத்தில் இன்று (16) காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மீகஹதென்ன பொலிஸார் தெரிவித்தனர்.

 தன்னுடைய மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (16) காலை 5 மணியளவில்  உறவினர்களுடன் திரும்பிக்கொண்டிருந்த போதே, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால், வீதியை விட்டு விலகி, வான் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

அதில் சிலர், மேலதிக சிகிச்சைகளுக்காக களுத்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .