Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2023 டிசெம்பர் 28 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-நிமோனியா என தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யக்கல பிரதேசத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள பிரதேசத்தில் வசித்து வந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையின் போது, அவர் கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக கம்பஹா மரண விசாரணை அதிகாரி டாக்டர் பி.பி.ஆர்.பி.ராஜபக்ஷ தெரிவித்தார்.
கம்பஹா மாநகரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள கசகஹவத்த சுடுகாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உயிரிழந்தவரின் சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளதாக மாநகரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன்னர் கண்டி வைத்தியசாலையில் கொரோனா மரணம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago
30 Apr 2025