Editorial / 2023 செப்டெம்பர் 01 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாளிகாவத்தை சங்கராஜா சுற்றுவட்டத்திற்கு அருகில் சில நிமிடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தனது புதிய கடையை இன்று (1) திறந்து வைத்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் கடையில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த நபரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago