Editorial / 2020 ஜூன் 08 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
மேல் மாகாணத்தில் களுத்துறை, கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் பயணிகள் சேவையில் ஈடுபடும் சகல தனியார் பஸ்களும், இன்று (08) முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக, மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் டயிள்யூ. பிரசன்ன தெரிவித்தார்.
இதற்கமைய, தனியார்துறையினருக்கு சொந்தமான 6,212 பஸ்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 4,750 பஸ்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
அத்துடன், கொரோனா வைரஸ் பரவலையடுத்து கடந்த சில தினங்களாக 2,300 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், இன்று (08) வழமைபோன்று சேவையை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சுகாதார வழிமுறைகளுக்கமைய ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றுமாறு, பஸ்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025