Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட். ஷாஜஹான்
நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கொடிகளையும், பதாகைகளையும் பொலிஸார் அகற்றிய வேளையில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை திட்டி அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் பிரதி அமைச்சருமான சரத்குமார குணரத்ன நேற்று வெள்ளிக்கிழமை (28) ஆஜரானார்.
சம்பவம் தொடர்பாக வாய்மூல அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றின் ஆஜராகுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு விடுக்கப்பட்டிருந்ததற்கு அமையவே அமைச்சர் மன்றில் இன்று ஆஜரானார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட பிரசாரக் கூட்டதிற்காக தேர்தல் சட்டவிதிகளை மீறி நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்டிருந்த கொடிகளையும், பெனர்களையும் பொலிஸார் அகற்றினர்.
இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை திட்டி அச்சுறுத்தல் விடுத்ததாக பொலிஸாரினால் அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரணகமகே முன்னிலையில் அவர், நேற்று ஆஜரானபோது, நீதவான் எச்சரித்து விடுதலை செய்ததோடு, நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்துக்கு சென்று வாய் மூல அறிக்கையை வழங்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், அக்டோபர் மாதம் 16ஆம் திகதி பிரதி அமைச்சரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
23 minute ago
30 minute ago