Princiya Dixci / 2016 ஜனவரி 21 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ்.எம்.நூர்தீன், அஸ்லம் மௌலானா
தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தினருக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று பற்றிய கலந்துரையாடல், கொழும்பில் நேற்று புதன்கிழமை (20) இடம்பெற்றது.
இந்த ஆரம்பகட்ட கலந்துரையாடலில் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட், பொறியியலாளர் எம்.எம். அப்துர்ரஹ்மான், அஷ்ஷெய்க் நஜா முஹம்மட் மற்றும் சட்டத்தரணிகளான முஹம்மட் இம்தியாஸ், அய்யூப் கான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
யாப்பு திருத்த நடைமுறையானது, கடந்த கால யாப்புத் திருத்தங்களைப் போலல்லாது இலங்கையின் அரசியல் சாசனத்தில் பரவலான மாற்றங்களை உட்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த யாப்புத் திருத்தங்கள், குறிப்பாக முஸ்லிம்களைப் பொறுத்த வரையிலும் ஏனைய சிறுபான்மை மக்களைப் பொறுத்த வரையிலும் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் மற்றும் எதிர்கால சமூகவியல் நோக்கிலும் எவ்வாறான விளைவுகளையும் தாக்கங்களையும் உருவாக்கும் என்பது பற்றி இங்கு முதற்கட்டமாக கலந்துரையாடப்பட்டது.
முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இதுபற்றிய கவனயீர்ப்பை மேற்கொண்டு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டங்களை மேற்கொள்வது பற்றியும் ஆராயப்பட்டது.
அந்த வகையில் எதிர்வரும் நாட்களில் முஸ்லிம் சட்டத்தரணிகள், சிவில் சமூக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுடனுமான கலந்துரையாடல்களை நடத்தி அவர்களின் ஆலோசனைகளோடும் ஒத்துழைப்போடும் தொடர்ச்சியான விழிப்பணர்வுத் திட்டங்களை மேற்கொள்வதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .