Princiya Dixci / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவில்Wi-fi வலயத்தை எற்படுத்துவதற்கு கொழும்பு மாநகரசபை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு மாநகரசபையின் மேயர் எம்.எப்.எம்.முஸம்மில் தலைமையில், இந்த Wi-fi வலயம், வியாழக்கிழமை (03) திறந்துவைக்கப்படவுள்ளது.
குறித்த Wi-fi வலயத்தை ஸ்ரீ லங்கா டெலிகொமின் உதவியுடன் விரிவுபடுத்தி அதன் பின்னர் மக்கள் பாவனைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.
ஏற்கெனவே கோட்டை புகையிரத நிலையம், கோட்டை பொது மற்றும் தனியார் பஸ் நிலையம், மிதக்கும் சந்தை, கொழும்பு சட்டக்கல்லூரி, கொழும்பு பொது நூலகம், தெஹிவளை மிருகக்காட்சிசாலை, கொழும்பு ரேஸ்கோர்ஸ், கொழும்பு பொலிஸ் தலைமையகம், காலி முகத்திடல், பத்தரமுல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் கொழும்பு நூதனசாலை ஆகியவற்றில்Wi-fi வலயம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 26 Wi-fi வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .