2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்னுடன் ஆணும் பெண்ணும் கைது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாரஹன்பிட்டி மற்றும் பொரளை ஆகிய பிரசேங்களில் 21 கிராமும் 250 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆணொருவரும் பெண்ணொருவரும், செவ்வாய்க்கிழமை (27) கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பொலிஸ் குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய பொரளையில் வைத்து, 20 கிராமும் 220 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த, அதே பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, 1 கிராமும் 30 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆணொருவர், நாரஹன்பிட்டியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X