2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்னுடன் பாக். பிரஜை கைது

Princiya Dixci   / 2017 ஜனவரி 02 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

கட்டாரிலிருந்து இலங்கைக்கு விமான மூலம் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான 2 கிலோகிராம்  ஹெரோய்னைக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் பாகிஸ்தான் பிரஜை ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை கைதுசெய்ததாக, கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த பிரஜையை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை இட்டபோது, அவரின் உடைமையில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான 2 கிலோகிராம்  ஹெரோய்ன் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X