Princiya Dixci / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு, தளுவகொட்டுவப் பிரதேசத்தில் வீடொன்றில் புகுந்து, பெண்ணொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 43 வயதுடைய சந்தேகநபரை, நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த, கடும் நிபந்தனைகளுடன் இன்று (18) பிணையில் விடுவித்தார்.
சந்தேகநபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் கொண்ட தலா இரண்டு நபர்களின் சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய, நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், சாட்சிகளுக்கு, சந்தேகநபர் அச்சசுறுத்தல் விடுக்கக் கூடாது எனவும் வாரத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில், கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் சந்தேகநபர் குற்றச்செயல் புரிவதற்காக வந்த வாகனத்தை விடுவிக்க முடியாது எனவும், நீதவான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு, எதிர்வரும் ஜுன் மாதம் 29ஆம் திகதி, மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சந்தேகநபருக்கு சொந்தமான நீர்கொழும்பு, தளுவகொட்டுவ பிரதேசத்தில் வீடொன்றில், பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் இரண்டு வயது பிள்ளையும் வசித்து வந்துள்ளனர்..
சம்பவம் இடம்பெற்ற கடந்த மார்ச் மாதம் 31ஆம் தியதியன்று, வீட்டில், கணவர் இல்லாத பகல் வேளையில் சந்தேகநபர், பாதிக்கப்பட்ட ஒரு பிள்ளையின் தயாரான 22 வயதுடைய பெண்ணை, வன்புணர்வு புரிந்துள்ளதாக, கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற குறித்த வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபரைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டாமென, குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர், நீதிமன்றின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago