Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Princiya Dixci / 2016 ஜனவரி 28 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில், வடிவேல் சக்திவேல்
கிழக்கின் முதலீட்டு அரங்கு மாநாடு, 'கிழக்கில் முதலிடுவோம்' எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் தலைமையில் கொழும்பு, கலதாரி ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை (28) நடைபெற்றது.
நாட்டின் மீது அக்கறைகொண்டுள்ள சர்வதேச முதலீட்டார்களும் சர்வேதச முதலீட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களும், பணம் படைத்த முதலீட்டார்களுடன் கொழும்புக்கு வெளியே உள்ள உள்ளூர் முதலீட்டார்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்கள்.
இம்மாநாட்டுக்கு சர்வதேச வர்த்தக அமைச்சு, இலங்கை முதலீட்டாளர்கள் சபை ஆகியன இணைந்து இந்த முயற்சிக்கு பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர். அத்துடன், இம்மாநாட்டின் நிகழ்வுகள் நாளையும் இடம்பெறவுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சவூதி அரேபியா இளவரசர் எச்.ஆர்.எச்.பிரின்ஸ் அப்துல் அஸீஸ் அல் சவூத், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநனர் ஒஸ்டின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பங்களாதேஷ், கட்டார், ஓமான், கனடா, லண்டன், இந்தியா, பாக்கிஸ்தான், ஐரோப்பியா மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகளிலிருந்தும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
44 minute ago
48 minute ago