2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'சமஸ்டிக்கு அனுமதியில்லை'

Niroshini   / 2017 ஜனவரி 23 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டைத் துண்டாடும் வகையிலான சமஸ்டி முறையில் ஆட்சி அதிகாரம் வழங்க, ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது” என்று, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

அரசியலமைப்பை மாற்றியமைக்க, ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்த அவர், 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று, அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய மாநாடு, கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டின் அரசியல் சாசனத்தையும் நீதியையும் மீறி செயற்பட்டு வருகின்றார்” எனக் குற்றஞ்சாட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X