2025 நவம்பர் 19, புதன்கிழமை

‘பண்டிகை காலத்துக்காக சுற்றி வளைப்பு’

Kogilavani   / 2017 மார்ச் 29 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் முகமாக, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை சுற்றி வளைக்க நடவடிக்கை  எடுக்கப்படவுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹசித திலகரட்ன தெரிவித்தார்.

இதற்கமைய, நாடு முழுவதிலும் இந்த திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கைகயை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, பண்டங்களின் தரம், காலாவதியாகும் திகதி மற்றும் விலை உள்ளிட்ட காரணிகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

மேலும், உத்தரவாதப் பத்திரம் இன்றி எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் விற்பனை செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X