2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

இலங்கை தமிழ் விவாதிகள் கழகம்; ஆண்டுப் பொதுக்கூட்டம் 2014

A.P.Mathan   / 2014 ஜனவரி 23 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழ் விவாதிகள் கழகத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் பெப்ரவரி 02, 2014 அன்று காலை 10.00 மணிக்கு இலக்கம் 121, ஹம்டன் ஒழுங்கை, வெள்ளவத்தையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் நடைபெறும். 
 
அடுத்து வரும் ஆண்டுக்கான தேசிய சபையைத் தெரிவு செய்வதற்கான தேர்தலும் இக் கூட்டத்தின் ஒரு பகுதியாக அமையும். ஆண்டுச் சந்தா செலுத்தும் உறுப்பினர்கள், அதே நாள் காலை 09.30 மணிக்கு முன்பாக சந்தாப் பணத்தைச் செலுத்தி தங்கள் உறுப்புரிமையைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்தலில் கலந்து கொள்ள விரும்பும் புதிய உறுப்பினர்கள் ஜனவரி 31, 2014 இற்கு முன்பாக கழகத்தில் இணைந்து கொள்ள வேண்டும். 
 
மேலும், தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதித் திகதி ஜனவரி 31, 2014 ஆகும். மேலதிக தகவல்களுக்கு, 0773597068 எனும் இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X