Super User / 2011 நவம்பர் 23 , பி.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.என். முனாஷா)
நீர்கொழும்பிலுள்ள விடுதியொன்றில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐந்து பேர் நேற்று புதன்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
போலஞ்சி மாவத்தையிலுள்ள இவ்விடுதியை விபசாரம் மேற்கொள்ளப்படுவதாக நீர்கொழும்பு சுற்றாடல் பிரிவுக்கு தகவல் கிடைத்ததையடுத்து மாறுவேடத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அனுப்பப்பட்டார்.
அதன்பின் விடுதி முகாமையாளர் 3 யுவதிகள் மற்றும் ஊழியர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
இந்த யுவதிகள் 18-20 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிற மாவட்டங்களைச் சேர்ந்த இந்த யுவதிகள், தொழிற்சாலைகளில் வேலை பெற்றுத் தருவதாக அழைத்துவரப்பட்டு இறுதியில் விபசாரத்திற்குத் தள்ளப்பட்டதாக இவர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago