Kogilavani / 2012 பெப்ரவரி 16 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
இளைஞர் நாடாளுமன்றத்தின் 5ஆவது அமர்வில் ஜனாதிபதியின் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவுள்ளது.
இளைஞர் நாடாளுமன்றத்தின் 5ஆவது அமர்வு எதிர்வரும் 23ஆம் 23ஆம்திகதிகளில், மகரகமவில் உள்ள இளைஞர் நிலையத்தில் நடைபெறவுள்ளதுடன் 85 புதிய உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணமும் செய்து கொள்ளவுள்ளனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் பணிப்பாளருமாகிய சட்டத்தரணி லலித் சியு பெரேராவின் பங்குபற்றலுடன் இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகபெரும மற்றும் பிரதி அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஆகியோரின் தலைமையில் இவ் அமர்வு நடைபெறவுள்ளது.
5ஆவது அமர்வின் விசேட விருந்தினராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் கலந்து கொள்கிறார் என இளைஞர் நாடாளுமன்றத்தின் உதவிப் பணிப்பாளர் டாக்டர் ஓ.கே.குணநாதன் தெரிவித்தார்.
இந்த அமர்வில் பல்வேறு காரணங்களுக்காக ஏற்பட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 85 புதிய உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன் முக்கியமாக இந்த அமர்வில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது எனவும் உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago