Super User / 2012 ஜனவரி 27 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே. என்.முனாஷா )
பாடசாலை சென்ற தனது மகன் 9 தினங்களாக வீடு திரும்பவில்லை நீர்கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
போருதொட்ட, பாடசாலையொன்றில் தரம் ஆறில் பயிலும் மொஹமட் ரஸுல் என்ற சிறுவனே காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாணவன் கொச்சிக்கடை, போருதொட்ட ,பள்ளியவத்தை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
கடந்த 19 ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலைக்கு சென்ற தனது மகன் வீடு திரும்பவில்லை எனவும் இது தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சிறுவனின் தாயார் ஹைனுல் பாத்திமா குறிப்பிடுகிறார்.
காணாமல் போயுள்ள சிறுவன் சுமார் மூன்றரை அடி உயரம் கொண்ட கறுத்த நிறமுடையவராவார். பாடசாலை சீருடை அணிந்த நிலையிலேயே அவர் காணாமல் போயுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago