Super User / 2011 நவம்பர் 20 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எ.எச்.எம்.பௌஸான்)
மல்வானை கல்வி முன்னேற்ற கழகம் கம்பஹா மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலை மாணவர்களிடையே நடத்திய க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான முன்னோடி பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் கழகத்தின் 11 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மல்வானை அல் - முபாரக் தேசிய பாடசாலை நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், அல் - மூஃசீன் நிதியத்தின் ஸ்தாபகர் இஸ்மாயீல் ஹாஜியார், கல்வி முன்னேற்றக் கழக தலைவர் பொறியியலாளர் மொஹமட் இம்டியாஸ்; உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, குறித்த பரீட்சையில் அதிகூடிய பெறுபேற்றை பெற்று முதல் பரிசான 20,000 ரூபா காசோலையை மினுவங்கொட அல் - அமான் மகா வித்தியாலய மாணவி எம்.ஏ.எப்.அஷீகா மற்றும் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி மாணவர் ஜென்ஸ்டன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


6 minute ago
18 minute ago
26 minute ago
31 minute ago
mohamed asir Monday, 21 November 2011 05:13 AM
கல்வி முன்னேற்றக் கழகத்துக்கு எனது நன்றி. இதே போன்ற நிகழ்வுகளை மென்மேலும் நடாத்தி ஊருக்கு மட்டுமல்லாது எமது சமூகத்துக்கும் நன்மை பெறவைக்க நான் பிரார்த்திக்கின்றேன்..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
26 minute ago
31 minute ago