2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மூடப்பட்ட கடவைக்கூடாக சென்றவருக்கு 17,000 ரூபா அபராதம்

Super User   / 2011 டிசெம்பர் 08 , மு.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதீன்)

மூடப்பட்டிருந்த ரயில் கடவையொன்றுக்கூடாக மோட்டார் சைக்கிளொன்றை செலுத்திய நபர் ஒருவருக்கு கொழும்பு போக்குவரத்து நீதிமன்றம் 17,000 ரூபா அபராதம் விதித்தது.

களனி பிரதேசத்தில் வீதியொன்று போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தபோது, களனி கல்பொர்ல பிரதேசத்தைச் சேர்ந்த இந்நபர் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றமைக்காக போக்குவரத்து நீதிமன்ற நீதவான் ஜெயராம் ட்ரொட்ஸ்கி இந்த அபராதத்தை விதித்தார்.

போக்குவரத்து விதிகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் அவற்றை மீறுவது விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாவதால் இவ்விதிகளை மீறுவோர் கடுமையாக கையாளப்பட வேண்டும் எனவும் நீதவான் கூறினார்.
 


  Comments - 0

  • hassanqs Thursday, 08 December 2011 02:58 PM

    nanri nethipathi avrkalukku.

    Reply : 0       0

    riyasali Thursday, 08 December 2011 03:13 PM

    உங்கள் நடவடிக்கைக்கு மிக்க மிக்க நன்றி. இது சரியான சட்டம் .

    Reply : 0       0

    K.Ponnuthurai Friday, 09 December 2011 01:30 PM

    நல்ல தீர்ப்பு வாழ்த்துகள் நீதிபதி அவர்களே ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X