2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷின் 19 உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் இலங்கை வருகை

Kogilavani   / 2013 ஜனவரி 16 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


பங்களாதேஷ் உள்ளூராட்சி அமைச்சின் தலைமையில் 19 உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்களைக் கொண்ட விசேட பிரமுகர்கள் இலங்கையில் காணப்படும் உள்ளூரட்சி முறைமை பற்றிக் கற்றுக் கொள்வதற்காக இலங்கை வந்துள்ளனர்.

இவர்களுக்கான இருநாள் செயலமர்வு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.

பணிப்பாளர் ஐ.ஏ.ஹமீட்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க இன்னும் பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் இவ்விசேட பிரமுகர்கள் நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு விஜயம் செய்து உள்ளூராட்சி நிறுவனங்களை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X