Super User / 2012 பெப்ரவரி 20 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரான் இஸ்லாமிய குடியரசின் 33ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு ஈரான் திரைப்பட விழா எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
கொழும்பிலுள்ள ஈரான் தூதுவராலயத்தின் கலாசார பிரிவு மற்றும் தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்தே ஈரான் திரைப்பட விழாவினை ஏற்பாடு செய்துள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி பௌத்தாலோக மாவத்தையிலுள்ள தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் திரையரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கையின் முன்னணி கலைஞர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட அழைப்பு விடுக்கப்பட்டோர் மாத்திரமே கலந்துகொள்ளவர்.
பெப்ரவரி 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் மாலை 5.30 மணிக்கு தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் திரையரங்கில் சுமார் 60 – 90 நிமிடங்களை கொண்ட ஈரானிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும்.
திரைப்பாட நிகழ்வுடன் சினிமா தொடர்பிலான புகைப்பட காண்காட்சியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடு அண்மையில் தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி நபி ஹசனி பேர் , கொழும்பிலுள்ள ஈரான் தூதுவராலயத்தின் கலாசார பிரிவு கொன்சியூலர் மெஹ்தி ஜீ.ரொக்னி மற்றும் தேசிய திரைப்பட கூட்டுத்தாபன தலைவர் அசோக சேரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். (படங்கள்: கித்ஸ்ரீ டி மெல்)


1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago