Super User / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எச்எம்.பௌஸான்)
கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியொன்றும் குருநாகலிலிருந்து கொழும்பு வந்து கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியொன்றும் கம்பஹா பகுதியில் நேருக்கு நேர் மோதியதால் 28 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மினுவாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று பி.ப. 03.45 மணியளவில் கொழும்பு மினுவாங்கொட பிரதான வீதியில் யாகொடமுள்ள, மிரிஸ்வத்த பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தவர்களுள் சிலர் கம்பஹா, ராகம மற்றும் கொழும்பு ஆகிய வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொட பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago