2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

காலையில் 41,000 மென்ரக வாகனங்கள் கொழும்பிற்குள் நுழைவு

Super User   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுபுன் டயஸ்

கொழும்பு நகரில் வாகன நெருக்கடியை குறைப்பதற்கான வழிவகைகளை கண்டறிவதற்காக மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி கடந்த செவ்வாய்க்கிழமை மாத்திரம் 41,000 மென்ரக வாகனங்கள் நுழைந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பினால் கொழும்பிலும் புற நகரிலும் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.

கொழும்பிற்குள் இவை வந்த நேரம், விட்டு போன நேரம், பயணிகள் எண்ணிக்கை, பயணத் தடங்கள், தரிப்பிடம் மற்றும் வேலை செய்யுமிடம் போன்ற விபரவங்கள் இந்த கணக்கெடுப்பிற்கு வழங்கப்பட்ட படிவங்கள் மூலம் பெறப்பட்டுள்ளன.

அதிகரித்து வரும் வாகன நெருக்கடியை குறைக்கும் மாற்று ஒழுங்குகளை கண்டுபிடிக்கும்படி தாம் கேட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியது. அத்துடன் ஒரு வழி முறைமை வெற்றியளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்புடன் தொடுக்கும் புதிய வீதிகளை அமைப்பதற்கான பல முன்மொழிவுகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X