Super User / 2011 ஒக்டோபர் 28 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இந்திக ராமநாயக்க)
கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலின் குளிர்சாதப் பெட்டியொன்றில் மனிதப் பாவனைக்குப் பொருத்தமற்ற சொசேஜ்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் அந்த ஹோட்டலின் பணிப்பாளர் ஒருவருக்கு மாளிகாகந்த நீதவான் இன்று வெள்ளிக்கிழமை 4000 ரூபா அபராதம் விதித்தார்.
காலாவதியான இரு வகையான சொசேஜ்களை வைத்திருந்ததாக அவர் மீது இரு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா 2000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
கொழும்பு மாநகரசபை உணவு பரிசோதககர் எம்.டி. லால் குமார ஏனைய உத்தியோகஸ்தர்களுடன் இணைந்து மேற்படி ஹோட்டலை முற்றுகையிட்டபோது, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மேற்படி சொசேஜ்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
6 minute ago
18 minute ago
26 minute ago
31 minute ago
Dr. Javahir Saturday, 29 October 2011 04:14 PM
தனி மனிதன் ஒருவன் தவறிழைக்கும் போது அவனின் பெயர், ஊர் மற்றும் சகல விபரமும் வெளியிடப்படுகிறது. Five Star Hotel என்பதால் விபரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இப்படியான செய்தியால் யாருக்கு என்ன பயன்?
Reply : 0 0
KB Saturday, 29 October 2011 05:10 PM
தயவு செய்து எந்த ஹோட்டல் என்று கூற முடியுமா? அங்கு போவதை தவிர்த்து கொள்ளலாம் இல்லையா...
Reply : 0 0
baala Sunday, 30 October 2011 07:06 AM
kb. அவர்களே சொல்லாவிட்டால் நீங்கள் அங்கு போய் விடுவீர்கள்? சும்மா உங்கள் மசாலக்கதையை குப்பையில் போடுங்கள் !
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
26 minute ago
31 minute ago