Editorial / 2017 ஜூலை 20 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனி இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் மறைத்து கொண்டுவரப்பட்ட, 160 கோடி ரூபாய் (1,600 மில்லியன்) பெறுமதியான கொகெய்ன், நேற்று (19) மீட்கப்பட்டதாக, கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்ட குத்தகையின் அடிப்படையில், பிரேசிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, இந்த சீனி கொள்கலன், கொழும்பு துறைமுகத்திலிருந்து, இரத்மலானையில் உள்ள சதொச களஞ்சியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்குவைத்து திறந்தபோதே, கொகெய்ன் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொகெய்ன், 10 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்தது என்றும், சந்தேகத்துக்கு இடமான ஒருபொதியை, திறந்துபார்த்த போது, அதில், ஒருவகையான போதைப்பொருள் இருந்ததாகவும் கண்டறியப்பட்டது. அதன் பின்னரே, தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக கல்கிஸை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, சீனி கொள்கலனுக்குள், போதைப்பொருளை மறைத்துவைத்து அனுப்பிய சந்தேகநபரை தேடி, வலைவிரித்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள, சதொச நிறுவனத் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோன்,
இரத்மலான சதொச வெயார் கௌசிக்கு, கொழும்பு துறைமுகத்திலிருந்து கொள்கலன் மூலம் கொண்டுவரப்பட்டிருந்த சீனியுடன் 10 வித்தியாசமான பொதிகள் காணப்பட்டதால், அவை தொடர்பில் கல்கிஸை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், அந்த கொள்கலனை தமது நிறுவனம் கல்கிஸை, பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.
சதொச நிறுவனத்துக்கான சீனி, விலைமனு கோரலின் அடிப்படையிலேயே ஒவ்வொரு வாரமும், கொள்வனவு செய்யப்படும். அந்த நடைமுறையே, பின்பற்றப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், இந்த வாரம் ரஞ்சிதா பிரைவைட் லிமிட்டட் நிறுவனமே விலைமனுக்கோரலின் போது, தெரிவாகியது. அந்த நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலனிலேயே, மேற்படி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்றார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago