A.P.Mathan / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கலைக்கழக ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதற்காக மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கலாம் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்...
ஆர்ப்பாட்டங்களுக்கு பல்கலைக்கழக மாணவர்களை கொண்டு செல்லும் பஸ்களின் உரிமையாளர்கள் மீது ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள விரும்பாத மாணவர்களும் பெற்றோர்களும் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். இதனால் பஸ்களுக்கு என்ன நடைபெறும் என்று கூறமுடியாது. எனவே, இத்தகைய பஸ் உரிமையாளர்கள் தமது பஸ்களை பாதுகாத்துக்கொள்ளவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago