Super User / 2011 மே 10 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் சந்திப்பு கடந்த சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. நாடு முழுவதுமுள்ள கிளை அங்கத்தவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கப்பட்டது
இதன்பொது அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் எழுதிய காதியானிஸம் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஹலால் பிரிவால் தயாரிக்கப்பட்ட ஹலால் விபரக்கொத்தும் வெளியீடு செய்யப்பட்டது.
இந்த ஹலால் விபரக்கொத்தில் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பெயர்களும் அந்நிறுனங்களின் பொருட்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஹலால் விபரக்கொத்து முதற் தடவையாக இறுவெட்டில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஹலால் நற்சான்றிதழை வழங்கக்கூடிய ஒரே ஒரு நிறுவனம் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையேயாகும். அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையினால் நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புத்திஜீவிகள், மௌலவிமார்கள் என பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
10 minute ago
22 minute ago
27 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
27 minute ago
35 minute ago