2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பொலிஸுக்கு எதிராக அனைத்து கம்பனி ஊழியர் சங்கம் வழக்கு

Super User   / 2011 மே 31 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுசைன், ஆர்.சுகந்தினி)

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடந்த திங்கட்கிழமை பொலிஸாரால் தாக்கப்பட்ட ஊழியர்களின் சார்பில் அனைத்துக் கம்பனிகளின் ஊழியர் சங்கம் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் இன்று தெரிவித்தது.  

தனியார்துறை ஓய்வூதியத் திட்டத்திற்கு அமைதியாக எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டிருந்த ஊழியர்களை கடுமையான பலவந்த பிரயோகம் செய்து கலைப்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லையெனவும் அச்சங்கத்தின்  தலைவர் வசந்த சமரசிங்க கூறினார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மனிதத் தன்மையற்ற முறையில் ஊழியர்களை மிருகத்தனமாக கலைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல தனியார்துறை ஊழியர்கள் நாடு முழுவதிலும் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சமரசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,  

'தொழிலாளர்கள்  இருவர் படுகாயமடைந்து உயிருக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர். 200 இற்க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் இந்த சட்டமூலத்தை கைவிட்டாலும் சரி கைவிடாதிருந்தாலும் சரி தொழிலாளர்கள் இது அமுலாகாமல் பார்த்துக்கொள்வார்கள்' என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 'போலியான ஓய்வூதியத் திட்டம் வேண்டாம்' போன்ற கோஷங்களை எழுப்பியவாறு பியகம சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Pix By:Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X