Super User / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)
கொழும்பு மாநகர சபை மேயர் கடமைகளை பொறுப்பேற்பதை தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்ததாக ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை குற்றம் சுமத்தியது.
கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகர சபையை ஐ.தே.க. கைப்பற்றியது.
மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் சத்தியப்பிரமாணம் செய்தவுடன் கடமைகளை பொறுப்பேற்க விரும்பியதாகவும் ஆனால் அரசாங்கம் அதனை தடுத்ததாகவும் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கூறினார்.
'கொழும்பு மாநகர சபை இன்னும் விசேட ஆணையாளரின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. இது பாரதூரமானதாகும்' என அவர் கூறினார்.
ரவி கருணாநாயக்க எம்.பிக்கு பதிலளித்த உள்ளூராட்சி பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்க, இத்தகை பிரச்சினை குறித்து தனக்கு தகவல் கிடைக்கவில்லை எனக் கூறினார். இத்தேர்தலில் மக்களின் அபிப்பிராயத்திற்கு அரசாங்கம் தலைவணங்குவதாகவும் கொழும்பு மாநகர சபையை ஐ.தே.க. எவ்வித பிரச்சினையுமன்றி நிர்வகிக்க அரசாங்கம் வழிவிடும் எனவும் கூறினார்.
அதேவேளை பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் ஐ.தே.கவின் பண்டாரவளை மாநகர சபை மேயரை அரசாங்கம் தொந்தரவுக்குள்ளாக்குவதாகவும் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தினார்.
இது தொடர்பாக முறையான கோரிக்கை விடுக்கப்பட்டால் இவ்விடயத்தை ஆராய்ந்து பார்க்கத் தயார் என பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்க கூறினார்.
7 minute ago
15 minute ago
20 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
20 minute ago
32 minute ago