Super User / 2011 ஒக்டோபர் 23 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யொஹான் பெரேரா)
நீர்கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் விசேட அதிரடிப்படையினரால் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை தொடர்பான உண்மை சில தினங்களில் வெளிவரும் என மேல் மாகாணத்தின் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சரான நிமல் லான்ஸா கூறினார்.
'இதன் பின்னால் யார் உள்ளனர் என்பது எனக்கும் புரியவில்லை. ஆனால் ஓரிரு தினங்களில் உண்மை வெளிவரும்' என அவர் கூறினார்.
இதன் பின்னணியில் ஏதேனும் சதி இருக்கலாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருதுவதால் அவர் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் நிமல் லான்ஸா கூறினார்.
தான் நீர்கொழும்பு மாநகர சபையில் இருந்தவேளை இம்முற்றுகை குறித்து முதலில் அறிந்ததாக அவர் கூறினார். 'எனது நண்பர்கள் சிலரின் வீடுகள் சோதனையிடப்படுவதாக நான் அறிந்தேன். சில நிமிடங்களின் பின்னர் எனது வீடும் சோதனையிடப்படுவதாக அறிந்து நான் வீட்டிற்கு விரைந்தேன்' என அவர் கூறினார்.
சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனங்கள் குறித்து சோதனையிடுமாறு உயர்மட்ட உத்தரவு கிடைத்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்ததாக நிமல் லான்ஸா கூறினார். ' நான் சோதனையைத் தொடருமாறு கூறினேன். ஆனால் அவர்களால் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனங்களுக்கான ஒரு ஆதாரத்தைக்கூட கண்டறிய முடியவில்லை' என மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்ஸா கூறினார்.
9 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago