Super User / 2011 ஒக்டோபர் 24 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
இலங்கை தொலைக்காட்சி நாடக நடிகையான அனுஷ்கா சொனாலி சயக்காரவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று பிடிவிறாந்து பிறப்பித்துள்ளார். அவரின் தந்தையை அச்சுறுத்தி ஒரு லட்சம் ரூபா பணம் பெற முயற்சித்தார் என்று குற்றம்சுமத்தப்பட்டு தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்தே நீதவான் லங்கா ஜயரட்ன இப்பிடிவிறாந்தை பிறப்பித்தார்.
கொம்பனித்தெரு பொலிஸார் தண்டனைக்கோவை 490 மற்றும் 374 ஆம் பிரிவுகளின் கீழ் நடிகை அனுஷ்கா சொனாலி சயுக்காரவுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்.
தனது மகளுக்கு தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் 400,000 ரூபாவை வழங்கியுள்ளதாகவும் தன்னை அச்சுறுத்தி மேலும் ஒரு லட்சம் ரூபாவை பெற முயற்சித்ததாகவும் அந்நடிகையின் தந்தை பொலிஸில் முறைப்பாடுசெய்திருந்தார். அதையடுத்து சொனாலி சயுக்கார கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
18 minute ago
23 minute ago
35 minute ago
AJMAL FROM THAMBALA Tuesday, 25 October 2011 08:35 PM
காலம் கலிகாலம் என்பது சரியாதான் போச்சி .......... நடிகைகளுக்கும் பணக்கஷ்டம் போல .....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
23 minute ago
35 minute ago