Super User / 2011 ஒக்டோபர் 26 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(புத்திக குமாரசிறி)
ஹொரணை பிரசேத்திலுள்ள பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கு 20 பிரம்படிகளை வழங்கியதுடன் முகத்தில் அறைந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியை ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
இந்த ஆசிரியை ஹொரணை நீதவான் மஹிந்த ரணசிங் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 50,000 ரூபா பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.
புhடசாலை மாணவியொருவருக்கு வழங்குவதற்காக பரிசுப்பொருளொன்றை கொண்டுவந்த குற்றச்சாட்டில் மேற்படி மாணவனை ஆசிரியை தாக்கியதாக ஹொரணை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் விமலரட்ன நீதிமன்றில் தெரிவித்தார். தாக்கப்பட்ட மாணவன் களுபோவில வைத்தியசாலையில் இரு நாடக்ள் சிகிச்சை பெற்றதாகவும் அவர் கூறினார்.
மேற்படி ஆசிரியை பொகுன்விட்ட, வெலிகம்பிட்டியவைச் சேர்ந்தவராவார்.
10 minute ago
18 minute ago
23 minute ago
35 minute ago
riswan Wednesday, 26 October 2011 08:33 PM
இன்று இலங்கையில் அரச உத்தியோகத்தர்கள் படும் படோ பெரும் பாடு..............
Reply : 0 0
Nishanthan Wednesday, 26 October 2011 09:36 PM
ஆசிரியர்கள் பலர் மாணவர்களை அடிப்பதற்கு தமக்கு உரிமை உள்ளதென கருதுகிறார்கள். ஆசிரியர் கலாசாலையில் பயிலும் 'மாணவர்ளையும்' அவர்களின் 'ஆசிரியர்கள்' அடித்து திருத்தலாமா?
Reply : 0 0
amakfareed Wednesday, 26 October 2011 10:02 PM
அடிக்கிற கைதான் அணைக்கும்
Reply : 0 0
meenavan Thursday, 27 October 2011 12:44 AM
அரச ஊழியரை மரத்தில் கட்டிவைத்த அரசியல்வாதிக்கு எந்த நடவடிக்கையும் இல்லை?
Reply : 0 0
KLM Thursday, 27 October 2011 04:38 AM
சில ஆசிரியர்கள் பிரம்பும் கையுமாகவே இருப்பார்கள். இராணுவ சிப்பாய் துப்பாக்கியுடன் இருப்பதைப் போல. ஒவ்வொருவரும் தமது பாடசாலை காலத்தை மீட்டிப்பார்த்தால் பயங்கர அனுபவங்கள் மனதில் நிழலாடலாம்.
Reply : 0 0
xlntgson Thursday, 27 October 2011 08:05 PM
கசை அடி! இதை நான் ஆதரிக்கிறவன் என்றாலும் சிக்கலான விடயம் தான். ஏனெனில் இதை செய்ய ஒருவரும் இருக்க மாட்டார்கள்! குறும்பும் கூத்தும் சகிக்கமுடியாமல் கூடும் போது பெற்றோர் கேட்டுக்கொள்வார்கள், 'என்பிள்ளையை நன்றாக அடியுங்கள்', என்று. ஆனால் சட்டம் பாயும் போது ஆசிரியருக்காக யார் வருவார்கள்? பாக்கு வெட்டியில் சிக்கிய கொட்டைப்பாக்கு மாதிரிதான் ஆசிரியர்கள்! ஊருக்கு இளைத்தான் ஆண்டி என்று அப்பாவிப் பெற்றோரின் பிள்ளைகள் அடிபடுவார்கள். ஆனால் பலம் வாய்ந்தவர் பிள்ளைகள் தான் குழப்பி குதூகலிக்கின்றவர்கள், தப்பிப்பர்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
23 minute ago
35 minute ago