Super User / 2011 ஒக்டோபர் 26 , பி.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொல்லப்பட்ட முல்லேரிய சம்பவத்திற்கும், கொழும்பு பங்குச் சந்தை நிலைமைக்கும், சட்டவிரோத போதைப் பொருட்களுக்கும் தொடர்பிருப்பதாக ரி.என்.எல். தொலைக்காட்சியின் உரிமையாளரான ஷான் விக்கிரமசிங்க தெரிவித்த பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தொடர்புகள் குறித்து தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்திய பின் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் ஷான் விக்கிரமசிங்க பிபிசி சந்தேஷயவிடம் தெரிவித்துள்ளார்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் ஆதரவாளர்கள் எனக்கூறப்படுபவர்களால் கொல்லப்பட்ட பின்னர் மேற்படி தொடர்பு அம்பலமாகியுள்ளது என பிபிசி சந்தேஷயவின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"துமிந்த சில்வாவும் தலையில் காயமடைந்த இச்சம்பவத்தையடுத்து போபை;பொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
சந்தையில் சட்டவிரோத போதைப்பொருள் இல்லாத நிலையில் பங்குச்சந்தையும் சரிந்துள்ளது' என விக்கிரமசிங்க விளக்கினார்.
'இதை நாம் ஆராய்ந்தபோது போதைப்பொருள் சந்தைக்கும் இப்பங்குச்சந்தைக்கும் தொடர்புள்ளதை நாம் அவதானித்தோம்'" என அவர் கூறினார் என பிபிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
meenavan Thursday, 27 October 2011 02:10 PM
முல்லேரியா போதை பொருள் வர்த்தகத்தின் கேந்திரம் எனவும் அறிய முடிகிறது. இவற்றின் பின்புலம் அரசியல்வாதிகள் இருப்பதானது,நாடு எங்கே செல்கிறது என்பதற்கு சான்றாக கொள்ளலாமா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago