Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 நவம்பர் 01 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தை பலவீனப்படுத்த மத்திய அரசாங்கம் முயற்சித்தால் 'மக்கள் சக்தி' பயன்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபையை ஐ.தே.க. கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
தெவட்டகஹா பள்ளிவசாலில் சமய வழிபாடுகளில் கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் சகிதம் பங்குபற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளதால் கொழும்பு மாநகர சபையை உரிய முழு அதிகாரங்களுடன் ஐ.தே.க ஆட்சி நடத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
குறைந்த வருமானம் பெறும் குடியிருப்பாளர்கள் மற்றும் முச்சக்கர வாகனசாரதிகள் ஆகியோரை பாதுகாப்பதற்கு ஐ.தே.கவுக்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது எனவும் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை நதமது கட்சி மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார்.
'குறைந்த வருமானம் பெறுபவர்களின் வீடுகளை தகர்ப்பதற்கும், நகரிலிருந்து முச்சக்கர வாகனங்களை அகற்றுவதற்கும் ஆதரளிக்கும் சக்திகள் உள்ளன. நாம் அவர்களை எதிர்கொள்வோம்' என ரணில் தெரிவித்தார்.
vanndu Wednesday, 02 November 2011 06:35 AM
மிஸ்டர் ரணில் அவர்களே ! மக்கள் சக்தியை பயன்படுத்தி முதலில் கட்சியில் உங்கள் ஆசனத்தை பாதுகாத்து கொள்ளளவும். பிறகு அரசை கவனிப்போம்.
Reply : 0 0
min Wednesday, 02 November 2011 06:34 PM
ஐயா நீங்க ரொம்ப நாளா இதேதான் சொல்றீங்க. ஒன்னும் நடந்ததா தெரியல்ல. என்ன பண்ணலாம் என்று யோசிங்க !
Reply : 0 0
Ossan Salam - Doha Wednesday, 02 November 2011 07:25 PM
உங்க மக்கள் சக்தியை கடந்த பதினான்கு தேர்தல்களில் பார்த்திட்டம். இனியும் அதே பல்லவியை பாடி பாடி இருங்கள். கொழும்பில் ஏதோ வென்று விட்டோம் என்ற மமதையில் புலம்புவதை விட்டுவிட்டு கட்சியை கட்டியெழுப்ப பாருங்கள். ஆனாலும் அது நடக்கும்போது ஊர்வலம் போய் முடியும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
40 minute ago
46 minute ago