Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 நவம்பர் 01 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்து ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வைத்தியசாலையிலிருந்து சற்றுமுன் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலதிக சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
உறவினர்களின் கோரிக்கை அடிப்படையில் அவர் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக சிகிச்சைக்காக அவர் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார் எனத் தெரியவருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை துமிந்த சில்வாவை வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. (கெலும் பண்டார)
neethan Wednesday, 02 November 2011 05:46 AM
துமிந்தவின் சிகிச்சைக்கு ஜனாதிபதி நிதி மட்டுமல்ல, பொதுமகன் வரியும் பயன்படுத்தப்படுமோ? கொலன்னாவை கொலை விடயமாக துமிந்தவிடம் போலிஸ் விசாரணை நடந்ததா?
Reply : 0 0
vanndu Wednesday, 02 November 2011 05:58 AM
நல்ல ஜனாதிபதி பார்த்தீர்களா? நேற்று போயி பார்த்து வந்தார். இன்று இவர் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு போகிறார்.
Reply : 0 0
asker Wednesday, 02 November 2011 07:42 PM
இது இப்படிதான் நடக்கும் என்று ஏற்கனவே தெரியும்.
Reply : 0 0
raja Thursday, 03 November 2011 12:30 AM
அவர் ஒரு அப்பாவி, என்ன சிறிய தவறு செய்தார்.
Reply : 0 0
UMMPA Thursday, 03 November 2011 05:31 AM
எப்படி இருக்கு நம்ம நாடு ! கொலை நடந்தது , கண் கண்ட சாட்சி இருக்கிறது .சரத் பொன்சேகாவுக்கு மட்டும் தான் நீதிமன்றமா ? மனிதஉரிமை மீறல் சட்டவல்லுனர்கள் எங்கே ?
Reply : 0 0
mohammed Thursday, 03 November 2011 04:47 PM
போங்கப்பா. துமிந்த ஐயா அவர் என்ன தலை போற குத்தமா பண்ணிட்டாரு.......அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.... எப்பிடி இருந்த இலங்கை இப்பிடி ஆய்ட்டே ......
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
30 minute ago