Super User / 2011 நவம்பர் 12 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளை வானில் வந்தவர்களால் நுகேகொடையில் வைத்து கடத்தப்பட்ட புத்தகக் கடை உரிமையாளர் ஒருவரை கண்டுபிடிப்பதற்கு மிரிஹான பொலிஸார் புலனாய்வுக் குழுவொன்றை ஈடுபடுத்தியுள்ளனர்.
நுகேகொடயிலுள்ள தனது புத்தகக் கடையை நேற்று வெள்ளிக்கிழமை மாலை மூடிவிட்டு தனது வாகனத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவரை சிலர் பிடித்து இழுத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் நடைபெற்றவுடன் அந்நபரின் மனைவி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனார்.
மேற்படி கடை உரிமையாளர் கடத்தப்படுவதை கண்ட முச்சக்கர வாகன சாரதியொருவர் இது குறித்து பொலிஸாருக்கு சாட்சியமளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மிரிஹான பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சண்டே டைம்ஸ்)
9 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago