Super User / 2011 நவம்பர் 22 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
வண. உவத்தென்ன சுமண தேரரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதமன்றம் இன்று பிடிவிறாந்து பிறப்பித்தது.
வர்த்தகர் ஒருவருக்கு மாதம்பையில் காணியொன்றை பெற்றுத்தருவதாக உறுதியளித்து 30 லட்சம் ரூபா மோசடி செய்ததாக வண சுமண தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்தே அத்தேரரை கைது செய்யுமாறு நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவு பிறப்பித்தார்.
முறைப்பாட்டளரான எல்.கே. டி சில்வா தான் 16.08.2007 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் வைத்து இத்தேரருக்கு 30லட்சம் ரூபாவை வழங்கியதாக நீதிமன்றுக்குத் தெரிவித்தார்.
இத்தேரர் உறுதியளித்தபடி காணியை வழங்கவில்லை எனவும் அதன்பின் பணத்தை தவணைமுறையில் திருப்பிக்கொடுப்பதற்கு தேர் இணங்கியதாகவும் கூறினார்.
3 hours ago
4 hours ago
meenavan Wednesday, 23 November 2011 05:39 AM
துறவியும் மோசடி செய்தால் இந்த நாட்டில் யாரைத்தான் நம்புவதோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago