2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நோய் காரணமாக இரத்மலான கனிஷ்ட பாடசாலை ஆரம்ப பிரிவு மூடப்பட்டது

Super User   / 2011 நவம்பர் 25 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மத்துகம கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள இரத்மலான கனிஷ்ட பாடசாலையின் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் 67 பேருக்கு கூவைக்கட்டு நோய் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அப்பாடசாலையின் ஆரம்பப்பிரிவு இன்று வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது.

இந்த நோய்த்தாக்கம் பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக குறித்த பாடசாலையின் ஆரம்பப்பிரிவை  உடனடியாக மூடுமாறு அப்பாடசாலைக்கு சென்ற வைத்தியர் பிரசாத் லியனகே அதிபருக்கு அறிவுறுத்தினார். 

இதனைத் தொடர்ந்து வலயப் பணிப்பாளரின் அனுமதியுடன் தரம் 1இலிருந்து தரம் 5 வரையான வகுப்புகள் மூடப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X