Super User / 2011 டிசெம்பர் 02 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
பொலிஸ் போதைப் பொருள் பணியகத்திற்கு கையெழுத்திடச் சென்ற நபர் ஒருவர் மரணமடைந்தமை தொடர்பாக அப்பணியகத்தின் உத்தியோகஸ்தர்களை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
மாளிகாவத்தையை சேர்ந்த மொஹமட் சதாக் மொஹமட் பாஹிம் எனும் 30 வயதான இந்நபர் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி பொலிஸ் போதை ஒழிப்பு பணியகத்திற்கு கையெழுத்திடச் சென்றபின் மரணமடைந்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேற்படி நபரின் மரணம் தொடர்பாக இதுவரை கொழும்பு கோட்டை பொலிஸார் மேற்கொண்ட விசாரணை நீதிமன்றத்திற்கு திருப்தியளிக்கவில்லை என நீதவான் தெரிவித்தார்.
இவ்விசாரணை விபரங்களை கொழும்பு மத்திக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் ஒப்படைக்குமாறும் விசாரணையை மற்றொரு பொலிஸ் குழுவிடம் ஒப்படைக்குமாறும் கோட்டை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
மேற்படி நபர் இறந்து 32 நாட்களாகிவிட்ட போதிலும் இதுவரை எந்தவொரு சந்தேக நபரையும் பொலிஸார் கண்டறியவில்லை என இறந்தவரின் குடும்பத்தினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரஷிக வீரதுங்க கூறினார்.
இம்மரணத்தில் குற்றச்செயலொன்று இடம்பெற்றிருப்பதாக கருதுவதற்கு நியாயமான சந்தேகம் உள்ளது என நீதவான் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago