2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்திற்கு மடிக்கணினி அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 06 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரட்றிக் ஈபேர்ட் மன்றம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின்  வலுவாக்கத்திற்காக  மடிக்கணினியொன்றையும் பல்லூடகத் தொகுதியொன்றையும் வழங்கி வைத்துள்ளது.

மன்ற திட்ட அதிகாரி மொகமட், சங்கத் தலைவர்  வி.ரி.சகாதேவராஜா,  பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோரிடம் மடிக்கணினியும் பல்லூடகத் தொகுதியும் கொழும்பில் நேற்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் பிரட்றிக் ஈபேர்ட் மன்றமும் இணைந்து மூலோபாய திட்டமிடல் எனும் தலைப்பிலான நான்கு நாள் செயலமர்வை  கொழும்பு மாலபே பயிற்சி நிலையத்தில் நடத்தி வருகின்றது.
ஆசிரியரின் குறைந்தபட்ச சம்பளத்தை  30,000 ரூபாவாக  உயர்த்த வேண்டுமெனவும் வலய ரீதியாக இடமாற்றசபைக் கூட்டங்கள் நடத்தப்படும்போது அதன் அறிக்கைகள் பொதுச்செயலாளருக்கு பணிப்பாளரும் தொழிற்சங்க பிரதிநிதியும் அனுப்பிவைக்க வேண்டுமெனவும்   கிளைக்குழுக் கூட்டங்களுக்கு தாய்ச்சங்க நிர்வாகிகள் மட்டும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டுமெனவும் இதன்போது தீர்;மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்துடன், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தாய்ச்சங்க நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். ஜனவரியில் முதலிரு வாரங்கள்  அங்கத்தவர் சேர்ப்பு வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கிளைக்கூட்டங்கள் ஜனவரி 31க்குள் நடத்தி முடிக்கப்படவேண்டும். தொடர்ந்து வலய மாவட்ட கூட்டங்களை நடத்த வேண்டும். எதிர்வரும்  பெப்ரவரி 18இல்  ஆட்சிமன்றக் கூட்டம் வவுனியாவில் நடத்தப்படும். வன்னி மாவட்டத்தில் புதிய ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தொழிற்சங்க விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இங்கு உரையாற்றிய பிரட்றிக் ஈபேர்ட் மன்ற திட்ட அதிகாரி எஸ்.எச்.எம்.மொகமட்,

'சார்ள்ஸ் டார்வினின் கூர்ப்புக்கொள்கையின்படி விவேகமும் பலமும் மட்டும் நிலைத்து நிற்க உதவாது. மாறாக சமுகத்திற்கும்    சூழலுக்கும் இயைபாக்கமுடையதாக இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். டைனோசார் ஒரு உதாரணமாகும். அவ்வகையில் கடந்த 30 வருட காலத்தில் பல சங்கங்கள் இருந்த இடம்தெரியாமல் மறைந்துபோக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் மட்டும் நிலைத்து நிற்கிறது. அதற்கு அதன் பொருத்தப்பாடே காரணமாகும்'  என்றார்.  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X