2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பஸ் நிலையத்தில் பணத்தை திருடிய பெண்கள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறையும் அபராதமும்

Super User   / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

          (கே. என்.முனாஷா)

 

நீர்கொழும்பு பஸ் நிலையத்தில் வர்த்தகர் ஒருவருடைய பணத்தை திருடிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இரு பெண்களுக்கு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி. அமரசிங்க, பத்து வருட காலம் ஒத்திவைத்த  இரு வருட கடூழிய சிறைத் தண்டனையும் தலா மூவாயிரம்  ரூபா அபராதமும்  விதித்தார்.  

மாதம்பை பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்களுக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது.

பிரதி வாதிகள் இருவரும் கட்டானை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவருடைய பணத்தை நீர்கொழும்பு பஸ் நிலையத்தில் வைத்து திருடிய போது அங்கிருந்த பொது மக்களால் பிடிக்கப்பட்டு நீர்கொழும்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்..


  Comments - 0

  • riswan Wednesday, 07 December 2011 10:57 PM

    வெள் டன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X