2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமைச்சர் றிசாத் நன்றி தெரிவிப்பு

Kogilavani   / 2011 டிசெம்பர் 07 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  மீள்குடியேறியுள்ள மக்களுக்கான பல்வேறுபட்ட வாழ்வதார மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுத்துவரும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் நன்றிகளை தெரிவிப்பதாக கூறியுள்ள கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், கடந்த 15 ஆண்டுகளின் பின்னர் சர்வதேச நாடுகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள எக்ஸ்போ-2012 கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் அழைப்புவிடுத்தார்.

இலங்கைக்கு வருகைத்தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினர்.

இக்குழவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான டேவிட் மார்டின், றிச்சர்;ட் ஹோவிட், அனா டேவிட், மற்றும் கொள்கை வகுப்பு ஆலோசகர் பிரிக்கட் பாட்டலி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

கைத்தொழில், வணிக அமைச்சின் கீழ் இயங்கும் வர்த்தக திணைக்களத்தின் தரவுகளின் படி, இலங்கை அதிகமான ஏற்றுமதி பொருட்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கே அனுப்பி வைக்கின்றது. 2010 ஆம் ஆண்டில், 4434 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறக் கூடியதாக இருந்தது. ஐக்கிய ராஜ்யம், ஜேர்மன், பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்துவருகின்றன.

ஆடைத் துறை, வலை பின்னல், துணிமணிகள், கப்பல், சீலைகள், மின்னியல் சாதனங்கள், மின்சார கருவிகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்பு மற்றும் உற்பத்தி துறைகளுக்கு இந்த நாடுகளின்; முதலீடுகள் காணப்படுகின்றன.

குறிப்பாக 1992 ஆம் ஆண்டிலிருந்து ஜரோப்பிய ஒன்றியம் இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றதுடன்  2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்தும் தொடர்ச்சியாக நிதி உதவிகளை வழங்கிவருகின்றதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை 2010 ஆண்டு காலப்பகுதியில்  ஐரோப்பிய ஒன்றியம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், வாழ்வாதார மற்றும் சமூக கட்டமைப்புக்கு என 16 மில்லியன் யூரோக்களை  வழங்கியுள்ளது. அதேவேளை உள்நாட்டில் இடம்பெயரந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் ஏனைய துறைகளுக்கான உதவிகளின் பலாபலன்களை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற குழுவுக்கு விளக்கமளித்தார்.

புனர்வாழ்வளிக்கப்படும் முன்னாள் விடுதலை புலிகளின் உறுப்பினர்களுக்கு தொழில்சார் மற்றும் தொழில் நுட்ப பயிற்சிகளையும், அரசாங்கத்தால் வழங்;கக் கூடியதாக இருக்கின்றது. அதேபோல் எதிர்வரும் ஜனவரியில் திவிநெகும வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் விவசாய செயற்திட்டமொன்றை நடை முறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன், இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள மக்களது வருமான செயற்பாடுகளுக்கான உதவிகள் பல வழங்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.

அமைச்சின் செயலாளர் திலக் கொல்லுரே, அமைச்சரின் ஆலோசகர் எம்.வாமதேவன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X