Super User / 2011 டிசெம்பர் 13 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
சர்ச்சைக்குரிய அமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளர் எனக் கூறப்படும் நபர் ஒருவர் இன்று பிற்பகல் கொழும்பு பிட்டகோட்டே பகுதியில் வைத்து வானொன்றில் வந்த குழுவொன்றினால் கடத்தப்பட்டதாகவும் பின்னர் இன்றிரவு விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
8-10 பேர் கொண்ட குழுவொன்றினால் இந்நபர் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தாகவும் பிற்பகல் 2.30 – 3 மணியளவில் இச்சம்பவம் நடைபெறுள்ளதகாவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அமல் ரொட்ரிகோ என்பவரே கடத்தப்பட்டர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். புறக்கோட்டை சந்திக்கருகிலுள்ள உணவகமொன்றில் வைத்தே அவர் கடத்தப்பட்டார்.
இது தொடர்பாக மாலை 6 மணியளவில் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
எனினும், இன்றிரவு கடத்தப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகவும் முறைப்பாட்டை வாபஸ் பெறுவதாகவும் ஒருவர் தொலைபேசி மூலம் அறிவித்தார் எனவும் ஆனால், அவர் முறைப்பாட்டை வாபஸ் பெறுவதற்கு பொலிஸ் நிலையத்திற்கு வரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
muheeth samsudeen Wednesday, 14 December 2011 06:26 AM
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
Reply : 0 0
muheeth samsudeen Wednesday, 14 December 2011 01:50 PM
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago