Super User / 2011 டிசெம்பர் 14 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
சர்வதேச நடுத்தீர்ப்பு நியாய மையமொன்றை அடுத்த வருடம் முதற்பகுதியில் கொழும்பில் நிறுவப்படவுள்ளதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நீதி அமைச்சில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குறித்த நிலையம் உலக வர்த்தக மைய கட்டிட தொகுதியிலேயே அமைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இது தொடர்பில் முதலீட்டு சபையுடனும் நீதி அமைச்சு பேச்சு நடத்துவதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்த நிலையம் அமைய பெற்றால் பிணக்குகள் தொடர்பான சட்டத்தரணிகளின் வருகை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு தேவையான நிதியுதவியினை உலக வங்கி வழங்கவுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
Amjath ULM Wednesday, 14 December 2011 07:52 PM
அனைத்து விடயங்களையும் சர்வதேசமயப்படுத்துவதில் வல்லவர், நீதித்துறையில்லும் பாரிய மாற்றங்கள் இடம்பெறுவதற்கு நன்றிகள்.....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago