Super User / 2012 ஜனவரி 07 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.என்.முனாஷா )
நீர்கொழும்பு நகரில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நீர்கொழும்பு நகரின் தெஹிமல்வத்தை, உடையார் தோப்பு, லாஸரஸ் வீதி, வடக்கு பிட்டிபனைநெவெல்வத்த, தம்மிட்ட வீதி, பிரதான வீதி, கடோல்கலே மற்றும் குரணை ஆகிய பிரதேசங்களில் அதிக எண்ண்க்கையானோர் டெங்கினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஆண்கள் விடுதியில் 28 பேரும் பெண்கள் விடுதியில் 22 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை கடந்த வாரம் நீர்கொழும்பில் சுமார் ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago