Menaka Mookandi / 2012 ஜனவரி 11 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எம்.மும்தாஜ், எம்.என்.எம்.ஹிஜாஸ்)
முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விருதோடைக் கிராமத்தில் வசதிகளுடன் புனரமைப்புச் செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய் மற்றும் குழந்தைகளுக்கான வைத்திய சிகிச்சை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முந்தல் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான விக்டர் என்டணி பெரேரா மற்றும் முன்னாள் வடமேல் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எச்.எம்.நவவி ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு இந்நிலையத்தினைத் திறந்து வைத்தனர்.
மிக நீண்ட காலமாக போதிய இட மற்றும் ஏனைய வசதிகளின்றி சிறியதோர் இடத்தில் இயங்கி வந்த இந்த சிகிச்சை நிலையத்தினை புனரமைப்புச் செய்வதற்காக கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.முஸம்மில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இதன் புனரமைப்புப் பணிகளுக்கென சுமார் எட்டறை இலட்சம் ரூபாய் ஒதுக்கிடப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முந்தல் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ருவன் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் தாய்மார்கள் பலரும் கலந்து கொண்டனர்.
10 minute ago
18 minute ago
23 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
23 minute ago
35 minute ago