Menaka Mookandi / 2012 ஜனவரி 19 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
'சுதந்திர தினத்தில் பல ஆயிரம் கைதிகளை விடுதலை செய்யப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இவர்களில் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரவிருப்பதாக' ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'கடந்த வருடம் பண்டிகை தினங்களில் கூட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படவில்லை என சிறைச்சாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். அதே நேரம் அடுத்த மாதம் சுதந்திர தின நாளிலே பல ஆயிரக்கணக்கான கைதிகள் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.
இதன்போது பல வருட காலங்களாக விசாரணைகள் இன்றியும் சந்தேகத்தின் பெயரிலும் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளையும் நல்லிணக்கத்தின் பெயரில் விடுதலை செய்ய வேண்டுமென பாதுகாப்பு செயலாளரிடம் கோரவுள்ளேன். பாதுகாப்பு செயலாளரின் உதவியாளர் மேஜர் ருவன் எலபொல மூலமாக அடுத்த வாரம் பாதுகாப்பு செயலாளரை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பின் போது அரசியல் கைதிகளின் நிலை பற்றியும், பல வருடகாலமாக அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அநீதி பற்றியும், அவர்களது குடும்ப பின்னணி பற்றியும், தெளிவான முறையிலே பாதுகாப்பு செயலாளருக்கு எடுத்துறைக்க வேண்டிய கடமைபாடு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு உள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு 13ஆவது திருத்த சட்டத்திற்கு அப்பால் கிடைக்கும் என்று ஜனாதிபதி அறிவித்திருக்கும் வேளையில், இனப்பிரச்சினை சம்பந்தமாக ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தின் மூலமாகவே இந்த அரசியல் கைதிகள் இன்னும் சிறைச்சாலைகளில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களை தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் வைத்திருப்பார்களேயாயின் சமாதான பேச்சுவார்த்தை அர்த்தமற்றதாகிவிடும். ஆகவே இவர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி விடுதலை செய்யவோ அல்லது சுதந்திர தினத்தில் நேரடியாக விடுதலை செய்யவோ அரசாங்கம் முன்வர வேண்டும்.
13ஆவது திருத்த சட்டத்திற்கு அப்பால் தீர்வினை வழங்க முடியும் என ஜனாதிபதியின் அறிவிப்பை அடுத்து புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஒரு விரும்பத்தக்க மாற்றத்தை என்னால் காண முடிகிறது. அதேபோல் தமிழ் அரசியல் கைதிகளையும் அரசாங்கம் விடுவிப்பார்களேயாயின் புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் ஜனாதிபதிக்கு தங்களது தார்மீக ஆதவை தெரிவிப்பார்கள்.
இப்படியான எமது மக்களின் நிலைப்பாட்டை பாதுகாப்பு செயலாளருடனான சந்திப்பின் போது தெளிவான முறையில் எடுத்துரைப்பேன். எனது இந்த நல்லிணக்க கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்கும் என்ற நம்பிக்கை அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் எதிர்ப்பார்க்கின்றேன்' என்று அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
10 minute ago
24 minute ago
46 minute ago
1 hours ago
Razik Thursday, 19 January 2012 09:35 PM
என்னையா இப்ப அடிக்கடி அறிக்கை விடுகிறீர்கள் .... ஏதாவது எலெக்சன் வருகுதோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
46 minute ago
1 hours ago